முகம் தெரியாத நபர் அளிக்கும் பதில் இணையத்தில் பதிவு : எதிர்ப்பின் மத்தியிலும் இணையத்தை கலக்குகிறது 'நெய்பர் சேலஞ்ச்'

வாஷிங்டன் : செல்போன் இலக்கத்தின் அடுத்த எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பும் நெய்பர் சேலஞ்ச் என்ற புதிய சவால் உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஐஸ் பக்கெட், நீல திமிங்கலம், மெமோ, பிட்னஸ், கிகி, பாட்டில் மூடி திறப்பு என இணையத்தில் புதிது புதிதாக சவால்கள் தோன்றி மறைகின்றன. அந்த வரிசையில் ‘நெய்பர் சேலஞ்ச் என்ற புதிய சவால் இணையத்தை ஆட்டிப் படைத்து வருகிறது.

நெய்பர் சேலஞ்ச் ஒருவருடைய மொபைல் போன் எண்ணுக்கு முந்தைய அல்லது பிந்தைய எண்ணுக்கு ஹாய் என்று தகவல் அனுப்புகிறது. இதற்கு அந்த முகம் தெரியாத நபர் அளிக்கும் பதில்களை அப்படியே பதிவு செய்து இணையப் பக்கத்தில் பதிவிடுவது தான் நெய்பர் சேலஞ்ச்.  சில பதில்கள் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் சில பதிவுகள் காரசாரமாகவும் இருக்கின்றன.

நெய்பர் சேலஞ்ச் மூலம் சிலர் நண்பர்களாகி விட்டாலும் பலருக்கு மோசமான பதில்கள் தான் பரிசாக கிடைக்கின்றது. அதே சமயம் குறுஞ்செய்தி அனுப்பியவர் பெண் என்றால் இணையர்கள் எல்லை மீறுவதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். விமர்சனங்கள் எழுந்தாலும் உலகம் முழுவதும் நெய்பர் சேலஞ்ச் சவால் தான் ட்ரெண்டாகி வருகிறது.

Related Stories: