10 மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம்: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று ஆலோசனை

புதுடெல்லி: நக்சலைட்டுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 2009-ம் ஆண்டின்படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220  மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் என்பதுடன் அவர்கள் ரெட் காரிடர் எனப்படும் பிராந்தியப் பகுதிகளில் 92,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில்  இயங்கி வருகின்றனர். ரிசெர்ச் அன்ட் அனாலிசிஸ் விங் என்ற இந்தியப் புலனாய்வு நிறுவனத்தின் கருத்தின்படி, அந்த இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் ஆகியோரைத்  தவிர்த்து 20,000 ஆயுதம் தாங்கிய நக்சலைட் வீரர்கள் இயங்குகின்றனர். அந்த இயக்கத்தின் செல்வாக்கு மிக்க வளர்ச்சியைக் கண்ட அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அதை இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு மிகவும்  அச்சுறுத்தலாக விளங்கும் அமைப்பு என்று அறிவித்தார்.

பொதுவாக அனைத்து இந்திய அரசியல் அமைப்புகளும் நக்சலைட்டுகளை ஆதரிப்பதில்லை.சத்தீஸ்கர், ஒரிசா, ஆந்திரா, மஹாராஸ்டிரா, ஜார்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம், மற்றும் மேற்கு வங்கம் போன்ற நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட  மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது என்பதுடன், நக்சலைட்டுகள் தப்பிச்செல்வதற்கான அனைத்து வழிகளும் தடுத்து நிறுத்தப்படும் என்று  வெளிப்படையாக அறிவித்தது. இதற்கிடையே, சத்தீஷ்கார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் நக்சலைட்டுகளுக்கு எதிராக அந்தந்த மாநில அரசுகள்  நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்தநிலையில், நக்சலைட்டுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நக்சலைட்டுகள் உள்ள பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்  இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், 10 மாநில முதலமைச்சர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள், உயர் காவல் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

Related Stories: