×

முன்னாள் எம்.எல்.சி.ஏ.ஆர்.தாமோதரன் மறைவு

சென்னை: சட்டமேலவை  முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் நிறுவனருமான ஏ.ஆர்.தாமோதரன் நேற்று காலமானார்.அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சட்டமேலவை உறுப்பினராக இருந்தவர் ஏ.ஆர்.தாமோதரன் முதலியார்(91). இவர் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் நிறுவனராகவும், அகில இந்திய பெட்ரோலிய  விற்பனையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியவர். இவர் நேற்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக்கம்  கார்டன் சாலையின் முதல் தெருவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி வெளியிட்ட அறிக்கை:பெட்ரோலிய வணிகத்தின் அறிவுக் களஞ்சியமாக திகழ்ந்த முன்னாள் தலைவர் ஏ.ஆர்.தாமோதரன் முதலியாரின் இழப்பை பெட்ரோலிய வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இழப்பாக கருதுகிறோம். அன்னாரின்  பிரிவால்  துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்களின் சார்பாக எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அவரின் மறைவையொட்டி 27ம் தேதி  திருச்சியில் நடைபெற இருந்த மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. கூட்டத்தின் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Former MLCAR Damodaran
× RELATED மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர்...