×

குமுளி சோதனை சாவடியில் கேரள போலீஸ் கண்காணிப்பு

கம்பம்,: தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக தமிழக, கேரள எல்லைப்பகுதிகளான குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு, வாளையார், ஆரியங்காவு, அச்சன்கோவில், பாறசாலை உள்ளிட்ட 14 முக்கிய  சோதனைச்சாவடிகளில் கேரள  போலீசார் முழு கண்காணிப்பில் உள்ளனர்.இந்நிலையில் தமிழக, கேரள எல்லையை இணைக்கும் தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லைப்பகுதிகளான குமுளி மற்றும் கம்பம்மெட்டில் உள்ள சோதனைச்சாவடிகளில்  கேரள காவல்துறையினர் நேற்று முதல் தீவிர வாகன கண்காணிப்பு  மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக, எல்லையைக் கடந்து கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் கடும் சோதனைக்கு பின்பே அனுப்பி வைக்கப்படுகின்றன.

Tags : Kerala police watchdog at Kumuli checkpoint
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...