×

வேதாரண்யத்தில் திடீர் கலவரம்: காவல்நிலையம், மருத்துவமனை மீது கல்வீச்சு...3 பேர் படுகாயம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஜீப் தீ வைத்து கொளுத்தப்பட்டது. காவல் நிலையம், அரசு மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.இதனால் அப்பகுதியில் போலீஸார்  குவிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று மாலை இருதரப்பினரிடைேய திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் காவல் நிலையம் எதிரே நின்றிருந்த ஜீப்பை அடித்து உடைத்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர்.  பின்னர் காவல் நிலையம் முன்பு கலவரக்காரர்கள் 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு இரு பெண் காவலர்கள் மட்டுமே இருந்தனர்.

 கலவரத்தை அறிந்தவுடன் அவர்கள் பயந்துபோய் உள்ளே சென்றுவிட்டனர். அப்போது மற்றொரு தரப்பினர் காவல் நிலையம் அருகே இருந்த அம்பேத்கர் சிலையை முற்றிலும் உடைத்தனர். இதையடுத்து இரு தரப்பினரும் வீசிக்கொண்ட  கல்வீச்சில் பாபுராஜன் (25), ராமச்சந்திரன் (24), சரத்குமார் (28) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை அறிந்த மற்றொரு தரப்பினர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு கண்ணாடியை கல்வீசி தாக்கி சேதப்படுத்தினர். மேலும் அங்குள்ள ஒரு டூவீலரையும் அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் போலீசாருக்கும் காயம்  ஏற்பட்டது. கலவரத்தால் வேதாரண்யம் பகுதியில் உடனடியாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தகவல் அறிந்த எஸ்பி ராஜசேகரன், தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, கல்வீசி தாக்கப்பட்ட காவல் நிலையம், உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை மற்றும் அரசு மருத்துமனை ஆகிய இடங்களுக்கு சென்று  ஆய்வு நடத்தினர். பின்னர் காவல் நிலையம், சிலை உடைக்கப்பட்ட இடம், வேதாரண்யம் அரசு மருத்துமனை உள்ள இடங்களில் 100க்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்புக்கு ஈடுபடுத்தினர். ஒரு சமூகத்தை சேர்ந்தவர் ஜீப்பில் வந்தபோது, மற்ெறாரு சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது மோதி விட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் இந்த கலவரம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கலவரத்தால் வேதாரண்யத்தில்  பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில் அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து காரைக்கால்-நாகை மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags : Sudden riots in Vedaranyam: Police, hospital fire ... 3 people injured
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்