கூடுதல் செலவே தவிர மக்களுக்கு பெரிதாக பலன்கள் இருக்காது: தேவசகாயம், முன்னாள் கலெக்டர்

வேலூர் மாவட்டத்தை திடீரென்று மூன்றாக பிரித்திருப்பது என்பது அரசியல் காரணத்திற்காக இருக்கலாம். ஒரு மாவட்டத்ைத இரண்டாக பிரிப்பார்கள் அல்லது பக்கத்தில் இருக்கும் மாவட்டத்தை சேர்ப்பார்கள். ஆனால் மூன்றாக பிரித்திருப்பது  ஏதோ கண்டிப்பாக அரசியல் காரணத்துக்காகத்தான் இருக்கும். மூன்று மாவட்டத்திற்கு மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் தேவைப்படுவார்கள். தமிழகத்தில் ஏற்கனவே 300 க்கும் மேற்ப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஒரு மாவட்டத்திற்கு ஒரு கலெக்டர் தான் தேவைப்படுவார்கள். புதிதாக மாவட்டங்கள் உருவாக்குவதன் மூலம் கூடுதலாக கலெக்டர், துணை கலெக்டர்,  போலீஸ் துறை போன்ற துறைகளில் பல வேலைவாய்ப்புகள் உருவாகத் தான் செய்யும் ஆனால் மக்கள் பணம் தான் வீணாகும்.

தற்போது புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பிரித்து இருக்கிற மாவட்டத்தை பற்றி ஆய்வு செய்திருக்க வேண்டும். மாவட்டம் எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிர்வாகம். ஆனால்  அப்படி செய்ததாக தெரியவில்லை. இரவோடு இரவாக அறிவித்திருக்கிறார்கள். கேட்டால் மக்கள் கேட்டதாக சொல்கிறார்கள். ஆனால் மாவட்டத்தை பிரிக்க மக்கள் கேட்ட மாதிரி தெரியவில்லை. இவர்களாகவே செய்திருப்பதன் உள்நோக்கம்  என்ன என்று தெரியவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 37 மாவட்டங்களாக உருவாகியுள்ளது. அதில் கலெக்டர்கள் ஏதோ தனியாக செயல்படுவது போல் தான் உள்ளது. அவர்களுக்கு மாநில அரசுக்கும்  இடையே ஒரு தொடர்பு இருப்பது போன்று தெரியவில்லை.  மக்களுக்கும் அவர்களுக்கும் கூட பெரிய அளவில் உறவு இல்லை. மக்களுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்தி, மாவட்டத்தை பிரச்னை இல்லாமல் கலெக்டர் வைத்திருக்க வேண்டும்.

ஆனால், இப்போது கலெக்டர் மக்கள் இடையே உறவு என்பது இல்லை. அதனால், தான் மக்கள் போராட்டம் நடக்கிறது. இதனால், ஏற்படும் சட்டம் ஒழுங்கை கன்ட்ரோல் செய்வதாக கூறி கலெக்டர்கள் தவறாக முடிவு எடுக்கின்றனர்.  அரசியல் சட்டத்தில் கமாண்டோ கன்ட்ரோல் போல இருக்க வேண்டும், அதாவது போலீஸ் துறையில் இருப்பது போல் எஸ்.பி, டிஎஸ்பி, ஐஜி இருக்கிறார்கள் அது போன்று கமாண்டோ கன்ட்ரோல் இருக்க வேண்டும். அப்போது எஸ்பி அளவில்  அதில் இளைஞர்கள் இருப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்கும் அளவுக்கு உயர் அதிகாரிகள் பீல்டு ஆபிசர் இருக்க வேண்டும்.

கலெக்டர் ஒருவர் தான் பீல்டு ஆபிசர். அவர் நேராக செயலாளருக்குத் தான் பதில் கூறுகிறார். அவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்வதில்லை. கலெக்டர்களுக்கு ஒரு வேலையும் கிடையாது. நான்-அட்மினிஸ்ட்ரேஷன், வருவாய்  அட்மினிஸ்ட்ரேஷன் உண்டு. அதில் பிஆர்ஓ, தாசில்தார், விஏஓ மற்றும் சட்டம் ஒழுங்கில் கலெக்டருக்கு பணி உண்டு. அவர் அந்த பணிகளை கவனித்து சிறப்புடன் பீல்டு வொர்க் செய்தால் மக்களுக்க ேதவையான அனைத்தும் கிடைக்கும்.  அதற்கு பொறுப்பு கலெக்டர் தான்.

தற்போது ஒரு மாவட்டத்ைத இரண்டாக பிரிப்பதால் கொஞ்சம் பேருக்கு நன்மைகள் கிடைக்க தான் செய்யும், அதாவது கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டுவது போன்ற நிர்வாக பணிகள் இருக்கும். அதனால், கொஞ்சம் பேருக்கு  வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அந்த மாவட்டத்திற்கு அருகில் வீடுகள் அமையும், புதிதாக கட்டிடங்கள் உருவாகும். அதனால் கட்டிடம் கட்டுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும், நிலங்கள் அதிக விலைக்கு விற்பனையாகும் கொஞ்சம்  பேருக்கு நன்மைகள் இருக்கும். ஆனால், பெரும்பாலான மக்களுக்கு பலன் தராது. புதிய மாவட்டங்கள் உருவாகுவதால் கூடுதல் செலவு தான் ஏற்படுமே தவிர மக்களுக்கு கூடுதல் பலன்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது.

Related Stories: