மக்கள் நலனுக்காகவே மாவட்டங்கள் பிரிப்பு: ஆர்.பி.உதயகுமார், வருவாய்த்துறை அமைச்சர்

தமிழகத்தில் இதுவரை 32 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் கூடுதலாக தற்போது 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களுக்கு இதன் பலன்கள் தெரியும்; மாவட்டங்களை பிரிப்பது, அரசின் சேவைகள் மக்களுக்கு மிக விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்; மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு எளிதில் அரசின் திட்டங்கள், பலன்கள் சென்றடைய இந்த முடிவு கைகொடுக்கும்.   குறிப்பிட்ட மாவட்ட மக்களுக்கு எந்த ஒரு அரசு துறைகளுக்கும் சென்று வர கணிசமான தூரம் உள்ளது. அதிகம் தூரம் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையோ, ஒரு கோட்டாட்சியர் அலுவலகத்தையோ, வட்டாட்சியர் அலுவலகத்தையோ  மக்கள் அணுகுவதற்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை தவிர்க்கவே, மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய் வட்டங்கள், கோட்டங்கள் அடிப்படையில் இது போன்று மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறது.

 இப்போது வேலூர் மாவட்டத்தை எடுத்து கொண்டீர்கள் என்றால் 13 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 250 கிலோ மீட்டர் தூரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதே போல நெல்லை,  விழுப்புரமும் அதே போல தான் உள்ளது. காஞ்சிபுரமும் அதே போல தான் இருக்கிறது. ஆகவே தான் வேலூரை 3 மாவட்டங்களாகவும், காஞ்சிபுரத்தை இரண்டு மாவட்டமாகவும், திருநெல்வேலியை இரண்டு மாவட்டமாகவும், விழுப்புரத்தை 2  மாவட்டமாகவும் தற்போது பிரிக்கப்பட்டுள்ளது.

அரசின் சேவை மக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டும். நிர்வாகத்தை விரைவாகவும், அதே போல கண்காணிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட உயர் மாவட்ட அலுவலர்கள் முதல் கடைகோடி அலுவலர்கள் வரை மிக  விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத் தான் அவ்வாறு பிரிக்கப்படுகிறது.

ஜெயலலிதா இருந்த போதே மாவட்டங்களை பிரிப்பதற்கு  ஒரு வரையறை வைத்திருந்தோம். அதன் அடிப்படையில் வருவாய் வட்டங்கள், கோட்டங்கள், மாவட்டங்கள் பிரிப்பதற்கு வரையறை உள்ளது. அது தான் ஏற்கனவே சொன்னது போன்று மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய் கிராமங்கள், வருவாய் கோட்டங்கள் இவை மினிமம், மேக்ஸிமம் இருக்க வேண்டும் என்று வழிமுறைகள் இருக்கிறது. இதன் அடிப்படையில் வட்டங்கள்,  கோட்டங்கள் மாவட்டங்கள் பிரிப்பது தொடர்பாக உயர்மட்ட குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அந்த குழு அவைகளை பிரிக்க ஒப்புதல் வழங்குகிறது. அந்த வகையில் தான் இதுவரை 85 புதிய வட்டங்களும், 11 புதிய கோட்டங்களும், 5 புதிய  மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய வட்டங்கள் உருவாக்கப்படும் போது புதிய வேலை வாய்ப்புகள் அங்கே உருவாக்கப்படும். அதில் கடைநிலை முதல் உயர்நிலை வரை காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மாவட்ட ஆட்சியர் முதல் கிராம உதவியாளர்கள்  வரைக்கும் நிர்வாகம் செய்வதற்கு எளிதாக இருக்கும் என்று இல்லாமல் மாவட்டங்களை பிரிப்பதால் அதற்குரிய வேலை வாய்ப்புகளும் உருவாகும். இதன் மூலம் ஐஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் வேலைப்பளுவை குறைக்கும். புதிய  மாவட்டங்களை  அமைப்பது என்பது கொள்கை முடிவு. முதல்வர் தான் தேவையின் அடிப்படையில், தகுதியின் அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக அறிவிப்பார்.

Related Stories: