அடுத்தடுத்து 5 மாவட்டங்கள் உதயம் நகைப்புக்கு இடமாகிறதா மாவட்ட பிரிப்பு?

பிரிட்டீஷ் ஆதிக்கத்தில் இருந்து 1947ல் விடுதலை பெற்றதும் இந்தியாவின் மாநிலங்களை எப்படி பிரிப்பது என்ற கேள்வி எழுந்தபோது பொதுவான கருத்தாக ெமாழிவாரியாக பிரிக்கலாம் என்று எழுந்தது. அப்படிதான் தமிழ்நாடும் பிரிக்கப்பட்டது.  இதன் காரணமாக மாநிலங்களின் எண்ணிக்கை 1950ல் அதிகரித்தது. மெட்ராஸ் மாகாணம் என்று இருந்த ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகியவை 1956ல் தனித்தனி மாநிலங்களாயின.  கடந்த 1953ல் இருந்து 1956 வரை  மாநில எல்லைகள் சீரமைப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டன. சென்னை மாகாணம் தனி மாநிலமானது; 1967ல் அண்ணா முதல்வரானதும் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. முதன்  முதலில் சென்னை  மாகாணமாக 1966ல் இருந்தபோது தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் தான் இருந்தன. அவை: செங்கல்பட்டு, ேகாயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம்,  தஞ்சாவூர்,  திருச்சிராப்பள்ளி,ராமநாதபுரம்,  திருநெல்வேலி.

முதன்முதலாக 1966ல் சேலம் பிரிக்கப்பட்டு தர்மபுரி உருவானது; கடைசியாக 2009ல் கோவை, ஈரோடு மாவட்டங்களில் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு திருப்பூர் உருவானது. இப்படி சமீப காலம் வரை 32 மாவட்டங்களாக இருந்தன. இப்போது  கூடுதலாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  கட்சிகளில் பதவி தருவதற்காக மாவட்டங்களை கிழக்கு, மேற்கு  என்று திசை வாரியாகவும், புறநகர், நகரம் என்றும் பல்வேறாக பிரிப்பதுண்டு. அப்படி வசதிக்காக பிரித்து விட்டதோ அரசு?   என்று நகைக்கின்றனர் மக்கள்.

லட்சக்கணக்கான அரசு பணிகள் காலியாக உள்ளன. மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த போதுமான அடிப்படை வசதிகள், அலுவலகங்கள் எல்லாம் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் புதிய மாவட்டங்கள் எந்த அளவுக்கு பலன் தரும்  என்பது கேள்விக்குறியே.

Related Stories: