கடந்த 2 ஆண்டுகளில் 5 அறிக்கை மட்டுமே தயாரிப்பு மத்திய அரசின் நிதியுதவி பெறாத நீர்வளத்துறை மேம்பாட்டு குழுமம்: ஓய்வு பெற்ற பொறியாளர்களால் அரசுக்கு வீண் செலவு

சென்னை: கடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசின் நிதியுதவி பெறாத நீர்வளத்துறை மேம்பாட்டு குழுமம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அரசுக்கு இக்குழுமத்தால் வீண் செலவு என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தவும், புதிய நீர் ஆதாரங்களை கண்டறியும், உரிய திட்டங்களை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு நீர்வள ஆதார மேம்பாட்டு குழுமம் கடந்த 2017ல் டிசம்பரில் தொடங்கப்பட்டது. இதன் மூலம்,  நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்களை கண்டறியவும் மத்திய அரசு நிதி மற்றும் இதர நிதி வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து நிதி பெற நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஓய்வு பெற்ற தலைமை  பொறியாளர் தலைமையில் இக்குழுமம் ஏற்படுத்தப்பட்டது.
Advertising
Advertising

இக்குழுமத்தில்  ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் தலைமையில் 6 பொறியாளர்கள் உள்ளனர். இந்த பொறியாளர்கள் குழுவினர் சார்பில் 6 பணிகளுக்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி வட்டம் மிஞ்சூர் ஒன்றியத்தில் காட்டூர் மற்றும் தட்டமஞ்சி இரட்டை ஏரிகளின் கொள்ளளவை மேம்படுத்தி புதிய நீர் தேக்கம் அமைத்தல் மற்றும் கடல் நீர் உட்புகுதலை தடுக்க கட்டுமானம் அமைக்க ரூ.65 கோடியில் செயல்படுத்த  நபார்டு வங்கி நிதியுதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று ரூ.161 கோடி மதிப்பில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் கழுவேலி ஏரியினை புதிய கட்டமைப்புகள் மூலம் மீட்டெடுத்து, நீர்த்தேக்கம் அமைத்தல்  மற்றும் கடல் நீர் கட்டுபடுத்துதல் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், ரூ.93 கோடி மதிப்பில் பரம்பிகுளம்

 ஆழியாறு கால்வாய் மற்றும் உயர்மட்ட கால்வாய் ஆகியவற்றில் கட்டுமானங்களை மேம்படுத்துதல் மற்றும் நுண்பாசன  அமைப்புகள் மூலம் பாசன திறன் மேம்படுத்தல், ரூ.49 கோடியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்த செயற்கை முறையில் நீர் செறிவூட்டும் கட்டமைப்புகள் அமைத்தல், ரூ.12 கோடியில் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி  நீரை மேம்படுத்த செயற்கை முறையில் நீர் செறிவூட்டும் கட்டமைப்புகள் அமைத்தல், ரூ.32 ேகாடி மதிப்பில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகே மகராஜசமுத்திரம் ஆற்றில் இருந்து நீரேற்றும் திட்டம் மூலம் ராஜா மடம் பிரதான  கால்வாய், கிளை கால்வாய் மற்றும் செல்லிக்குறிச்சி ஏரிக்கு நீர் ்வழங்குதல் ஆகிய 4 பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கைக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீர்வள ஆதார மேம்பாட்டு குழுமம் அமைத்து தற்போது வரை எந்த பணிகளுக்கும் நிதியுதவி பெறாத நிலையில், அதனால் கூடுதல் செலவு தான் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த அறிக்கை தயாரிக்கும் பணிகள் கூட உள்ளூர் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: