சென்னை காவல் துறை சார்பில் போலீசாருக்கு பாஸ்போர்ட் மேளா

சென்னை: சென்னை மாநகர நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகர காவல் துறை  மற்றும் மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளுடன் இணைந்து காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்திற்கான ‘பாஸ்போர்ட் மேளா’ வரும் செப்டம்பர் 2வது வாரத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள  விருப்பமுள்ளவர்கள், சென்னை நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் அலுவலகத்தில் வழங்கப்படும் படிவத்தில், காவல் நிலையம், பதவி மற்றும் எண், காவலர்கள், அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் இடத்தில் தங்களது பெயர் எழுத  வேண்டும். மனைவி மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை விவரங்கள் குறிக்க வேண்டும்.

* குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் அரசு பதவியில் இருந்தால் எச்- படிவத்தை (மூன்று அசல் படிவங்கள்) www.passportseva.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியின் ஒப்புதல்  கையொப்பத்துடன் வைத்திருக்க வேண்டும்.

* மாணவர்களாக இருந்தால் கல்வி நிறுவனத்தில் இருந்து உறுதி சான்று வைத்திருக்க வேண்டும்.

* முகவரி சான்று: ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், எரிவாயு ரசீது, வங்கி பாஸ் புக் உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒன்று.

* வயது சான்று: டி.சி., 10ம் வகுப்பு சான்று, 12ம் வகுப்பு சான்று, டிகிரி சான்று.

* நிரப்பட்ட படிவத்தினை chennaipolicepassport@gmail.com என்ற இணையதள முகவரிக்கு வரும் 5ம் தேதிக்குகள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: