தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. சில மாவட்டங்களில் நீடிக்கும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இந்நிலையில்,  கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறையத் தொடங்கியது. இந்நிலையில், மீண்டும் வெயிலின் அளவு அதிகரித்துள்ளதால்,வெப்ப சலனம் மேலும் நீடிக்கிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  அதிகபட்சமாக நேற்று சின்னகல்லாரில் 30மிமீ  மழை பெய்துள்ளது. வால்பாறை, தாம்பரம், தேவாலா 20மிமீ, சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, காவேரிப்பாக்கம், கேளம்பாக்கம், காஞ்சிபுரம், தரமணி, நத்தம், தேவக்கோட்டை 10மிமீ மழை  பெய்துள்ளது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல்அடுக்கில் காற்று சுழற்சியானது நீடிப்பதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

Related Stories: