இணையதளம் வழியாக டிப்ளமோ நர்சிங் படிக்க விண்ணப்பிக்கலாம்

சென்னை:  2019-20ம் கல்வி ஆண்டுக்கான டிப்ளமோ நர்சிங் படிக்க இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியள்ளதாவது:2019-20ம் கல்வி ஆண்டுக்கான டிப்ளமோ நர்சிங் படிக்க இன்று முதல் இணையதளத்தில் //www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற  இணையதளத்தில் இன்று காலை 10 மணி முதல் செப்டம்பர் 4ம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 6ம் தேதி  மாலை 5 மணி ஆகும். விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு வை சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பிற பிரிவை  சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ₹400ஐ இணையதளவங்கி சேவை மூலம் செலுத்தலாம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் The secretary committee, kilpauk, chennai-10 என்ற பெயரில் சென்னையில் பணமாக மாற்றத் தக்கதாக  டிடியாகவும் செலுத்தலாம்.

Advertising
Advertising

Related Stories: