விஜயகாந்த் பிறந்தநாள் முதல்வர் எடப்பாடி, தமிழிசை வாழ்த்து

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் எடப்பாடி, தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 68வது பிறந்த நாளை கொண்டாடும் தங்களுக்கு  என் உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

கலை ஆர்வம் மிக்கவராய் திரைத்துறையில் உங்களுக்கென ஒரு தனி முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் பொது வாழ்விலும் சிறந்த பணியாற்றி வரும் தாங்கள் நீண்ட ஆயுள் உடனும், நல்ல ஆரோக்கியத்துடனும்  தொடர்ந்து மக்கள் பணியாற்றும் வண்ணம் அனைத்து வளமும், நலமும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு எனது உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து. அவர், மக்கள் பணி தொடர இறைவனை வேண்டி வாழ்க நூறாண்டு என பாஜக சார்பில் வாழ்த்துகிறேன்.

Related Stories: