×

கோமாவில் சிகிச்சை பெற்று வந்த சித்தார்த்தாவின் தந்தை இறந்தார்

சிக்கமகளூரு: காபி டே உரிமையாளர் சித்தார்த்தா இறந்த செய்தியை  தெரிந்து கொள்ளாமலேயே கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவரது தந்தை  கங்கய்யா ஹெக்டே நேற்று காலமானார்.  காபி விற்பனையில்  இந்தியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கியவர்  சிக்கமகளூருவை சேர்ந்த தொழிலதிபர் சித்தார்த்தா. கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன். இவர் கடந்த மாதம் 29ம்   ேததி கடன் தொல்லை காரணமாக நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை  செய்து கொண்டார்.

இவரது மரணம் இவரின் குடும்பத்தார் மற்றும்  காபி  தோட்டத்தில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. சித்தார்த்தாவை தொழிலதிபராக மாற்ற காரணமான இவரது தந்தை  கங்கய்யா ஹெக்டே,  உடல் நலம் பாதிக்கப்பட்டு  கோமா நிலைக்கு சென்று விட்டார். அவருக்கு மைசூருவில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன்  காரணமாகவே தனது மகன் சித்தார்த்தா தற்கொலை செய்து ெகாண்டது  கூட கங்கய்யா  ஹெக்டேவுக்கு தெரியாமல் போனது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். இவரது  உடல் நேற்று சொந்த ஊரான சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகாவில் உள்ள  சீக்கனஹள்ளி கிராமத்திற்கு  கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான காபி தோட்ட தொழிலாளர்கள், காபி டே நிறுவன  ஊழியர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.  பின்னர் சொந்த ஊரிலேயே அவரது உடல் தகனம்  செய்யப்பட்டது.

Tags : Siddhartha's father, who was receiving treatment in a coma, died
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...