கடந்த 5 ஆண்டில் படுமோசம் கம்பெனிகளில் லாபம் இல்லை கடைகளில் விற்பனை இல்லை

புதுடெல்லி: கம்பெனிகளில் வழக்கமாக கிடைக்கும் லாபம் இல்லை; கடைகளில் விற்பனை படுத்து விட்டது. இது தான் கடந்த ஐந்தாண்டின் நிலை; கடந்த 25 ஆண்டுகளில் இப்படி ஒரு நிலை இருந்ததில்லை என்று திடுக்கிடும் சர்வே  கூறுகிறது. கிராமங்களில் உற்பத்தி, விற்பனையில் ஆரம்பித்து, நகரங்களில் தொடர்ந்து,  அதுவே வெளிநாட்டு முதலீடுகளை பெருக்க வைத்தால் தான் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும். இதில் ஏதாவது ஒன்றில் சறுக்கல் ஏற்பட்டாலும், பாதிப்பு  துவங்கி விடும்.

  பொருளாதார வீழ்ச்சி பற்றி பரபரப்பாக பேசப்படும் இந்த வேளையில், பல்வேறு சர்வேக்கள் வந்த வண்ணம் உள்ளன. நாடு முழுக்க கடைகளில் விற்பனை, கம்பெனிகளில் லாபம் பற்றி உரிமையாளர்கள் தரப்பிலான சர்வே வெளியாகி உள்ளது.  இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற தனிப்பட்ட அமைப்பு இந்த சர்வேயை எடுத்து வெளியிட்டுள்ளது.

 சர்வேயில் கூறியிருப்பதாவது:

கடந்த 2013-14 முதல் 2017-18 வரையிலான ஐந்து நிதி ஆண்டுகளில் தான் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.  

n கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு முழுக்க பெரும்பாலான முன்னணி, நடுத்தர கம்பெனிகள் லாபம் சரிந்துள்ளது. கடைகளில் விற்பனை படுபாதாளத்துக்கு சென்றுள்ளது. இதில் அரசு நடத்தும் நிறுவனங்களின் நிலை இன்னும்  படுமோசம்.

n கடந்த 2002 - 02ல் இருந்து 2007 - 08 வரை கணக்கிட்டால், சராசரியாக பார்த்தால் கடைகளில் விற்பனை 21.2 சதவீதமாக இருந்துள்ளது.  ஆனால், கடந்த ஐந்தாண்டில் இது 6 சதவீதத்தில் தள்ளாடி வந்துள்ளது.

n அரசு நிறுவனங்களின் விற்பனை 5.5 சதவீதத்துக்கு கூட இறங்கி உள்ளது. மிக மோசமான விற்பனை சதவீதம் என்பது 2.6 சதவீதம். இன்னும்  சில நிறுவனங்களில் விற்பனை அறவே இல்லாத நிலையும் காணப்பட்டது.

n தனியார் நிறுவனங்கள் 6 முதல் 6.5 சதவீதம் விற்பனை வருவாயை ஈட்ட தத்தளித்த நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை வருவாய் 13.5 சதவீதமாக இருந்துள்ளது. இதுவும் மிக குறைவான சதவீதம்.

nகம்பெனிகளில் லாபத்தை பொறுத்தவரை, சராசரியாக கடந்த 2002 - 03 முதல் 2007 - 08  வரையிலான காலகட்டங்களில் லாப சதவீதம் 1.1 சதவீதம் ஏறியபடி காணப்பட்டது.

n ஆனால், கடந்த ஐந்தாண்டில் கம்பெனிகள் லாபம் ஆண்டுதோறும் 4.7 சதவீதம் வரை சரிந்து வந்துள்ளது.

n இந்த சரிவுக்கு காரணம், போதுமான அரசு உதவி இல்லாத நிலை, வரி விதிப்பு மாற்றங்கள் போன்றவை தான்.   இவ்வாறு சர்வே கூறியுள்ளது.

Related Stories: