×

வெளிநாடுகளில் பணம் குவிப்பு நரேஷ் கோயலுக்கு கிடுக்கிப்பிடி...அமலாக்கத்துறை தீவிரம்

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவாலாக்கி பதவி விலகிய நரேஷ் கோயலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்து வருகிறது அமலாக்கத்துறை.  ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவால் நிலைமையில் தத்தளிக்க ஆரம்பித்து விட்டது என்றதும் கடந்த மார்ச் மாதம் தலைவர் பதவியில் இருந்து விலகினார் கோயல். அந்த நிறுவனத்தை வேறு எந்த ஒரு நிறுவனமும் எடுத்து நடத்த  தயங்குகின்றன. இருந்தும் தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில், நரேஷ் ேகாயல் மீது அமலாக்கத்துறை கண் வைத்துள்ளது. அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சமீபத்தில் அதிரடியாக அவர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பல முக்கிய  ஆவணங்கள் சிக்கின. இதில் பல திடுக்கிடும்  தகவல் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை  அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: பல்வேறு வரி முறைகேடுகளில் கோயல் ஈடுபட்டு வருகிறார். வரி ஏய்ப்பு செய்ததும் இல்லாமல், பல நாடுகளில் கிட்டத்தட்ட 19 கம்பெனிகள் நடத்தி வருகிறார். வெளிநாடுகளில்  சொத்துக்களை குவித்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இது பற்றி விரிவான விசாரணைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வரியில்லா சொர்க்க நாடுகளான சிலவற்றில் தான் இவர் அதிக அளவு பணத்தை முடக்கி உள்ளார். பல தொழில்களில் இவர் பணம் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இவர் மறைமுகமாக பணம்  அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி இவரிடம் விசாரணை நடக்கிறது.

வௌிநாடுகளில் உள்ள  வங்கிகளில் உள்ள சில கணக்குகளில் இவர் பெயர் உள்ளது. அதன் மூலம் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வங்கிகளில் பெரிய  அளவில் அவர் பணத்தை டெபாசிட் செய்துள்ளார்  என்றும் தெரிகிறது. முதல் கட்ட விசாரணையில், வெளிநாட்டு கம்பெனிகளுடன் பணபரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பண மோசடி சட்டப்படி இவர் பல தவறுகளை செய்துள்ளார். அதன் பேரில் இவர் மீது வழக்கு போடப்படலாம்.  இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Naresh Goyal's crackdown on money laundering overseas ...
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...