சட்லெஜ் நதியில் தண்ணீரை திறந்து விட்டது பாகிஸ்தான்: பஞ்சாப் கிராமங்களில் வெள்ள அபாயம்

சண்டிகர்: சட்லெஜ் நதியில் பாகிஸ்தான் அதிகளவு தண்ணீரை திறந்து விட்டதால், பஞ்சாப் கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.  சட்லெஜ் நதி பாகிஸ்தானிலிருந்து, பஞ்சாப் வழியாக செல்கிறது. சட்லெஜ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள சுலமான்கி தடுப்பணையிலிருந்து  அதிகளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டது.  இதனால் இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் உள்ள பெரோஸ்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘பாகிஸ்தான் அதிகளவு தண்ணீரை திறந்து விட்டுள்ளதால், டெண்டிவாலா கிராமத்தில் நீர்த்தடுப்புகள் சேதம் அடைந்து விட்டன. பல கிராமங்களில் வெள்ள அபாயம்  ஏற்பட்டுள்ளது. இதனால் சட்லெஜ் ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது’’ என்றார்.  நீர்த்தடுப்புகளை பலப்படுத்தும் பணியை ராணுவத்துடன் சேர்ந்து மேற்கொள்ளுமாறு நீர்வளத்துறைக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: