×

கேரள முதல்வர் கையை பிடித்து திருகி வசை பாடிய மூதாட்டி

திருவனந்தபுரம்: கண்ணூரில் நடந்த விழாவில் முதல்வர் பினராய் விஜயனின் கையை பிடித்து திருகி, மூதாட்டி ஒருவர் வசைபாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரண உதவி மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழா கண்ணூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.  இதில்  முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.   அப்போது திடீரென மேடைக்கு வந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி  அமைச்சர்களுடன் கைகுலுக்கினார்.   கடைசியில் அந்த மூதாட்டி முதல்வர்  பிரனாய் விஜயனுடன் கைகுலுக்கினார்.

பின்னர்  திடீரென முதல்வரின் கையை விடாமல் திருகி, ‘‘உங்களை போன்ற ஆட்களை நான்  விடப்போவதில்லை. ஒருவரையும் விடப்போவதில்லை’’ என உரக்க கத்தினார். மூதாட்டியின் பிடியில் இருந்து முதல்வர் விடுபட முயற்சித்தும்  அவர்  கையை விடவில்லை. இதனால் கோபமடைந்த பினராய் விஜயன் கையை உதறிவிட்டு ‘கீழே  போய் அமருங்கள்’ என சப்தமிட்டார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள்  மற்றும் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியை வெளியே அழைத்து சென்றனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் அந்த  மூதாட்டி கண்ணூர் அருகே தளிப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர்  சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.


Tags : Muthatti sung by the Chief Minister of Kerala
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்