×

காஷ்மீரில் தரைவழி தொலைபேசி சேவைகள் தொடக்கம்

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் தரைவழி தொலைத் தொடர்பு சேவைகள் மட்டும் நேற்று தொடங்கப்பட்டது.  ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றி வதந்தி, பொய் செய்திகள் பரவுவதை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் கடந்த 5ம் தேதி முதல் தொலைத்தொடர்பு சேவைகள், இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டு  உள்ளன. கடந்த சில நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதியான சூழல் நிலவுகிறது. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால், இங்கும்  மட்டும் தகவல் தொடர்பு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.  பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் தரைவழி தொலைத் தொடர்பு ேசவைகள் நேற்று மீண்டும் தொடங்கியது. ஒரு சில நிறுவனங்கள் நிலையான தொலைபேசி சேவையை வழங்கின. ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் மாலை முதல்  தரைவழி தொலைத்தொடர்பு சேவைகள் தொடங்கின. அனைத்து பகுதிகளிலும் முழுவதுமான தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரைவழி தொலைதொடர்பு சேவைகள் தொடங்கப்பட்ட போதிலும்,  இன்டர்நெட், பிஎஸ்என்எல் பிராட்பேண்ட், தனியார் இன்டர்நெட் ேசவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. கடந்த 5ம் தேதி முதல் தொடர்ந்து இந்த சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.



Tags : Launch of ground telephone services in Kashmir
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...