முன்னாள் சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

தேவகவுடா கூறுகையில்,   சட்டப்பேரவையில் குமாரசாமி நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்தார்.  நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்துகொண்டிருந்தது. ஆனால்,  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னரே சபாநாயகர்  ரமேஷ்குமார்  எதிர்க்கட்சி தலைவராக இருந்த எடியூரப்பாவுக்கு ஒரு துண்டு சீட்டை  அனுப்பினார். அதில், நீங்கள் (எடியூரப்பா) முதல்வராவது உறுதி என  எழுதியிருந்தார். மேலும் அந்த துண்டு சீட்டில் இன்று மாலையே நம்பிக்கை   வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுகிறேன். அதன்பின் நீங்கள் தான் முதல்வர் என  குறிப்பிட்டுள்ளார். இதை படித்துப் பார்த்த எடியூரப்பா மகிழ்ச்சி அடைந்தார் என்றார்.  தேவகவுடாவின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த தலைவர்கள் யாரும் பதில் அளிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: