அண்ணா பிறந்த நாளையொட்டி பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி

ஆலந்தூர்: ஆலந்தூரில் அண்ணா பிறந்தநாளை ஒட்டி பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. சென்னை தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பாக அண்ணா 111வது பிறந்த நாளையொட்டி  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ்., நிதி மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம்  நடந்தது. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டம் தலைமை வகித்தார். இலக்கிய அணிகளின் நிர்வாகிகள் எம்.எஸ்.மணி, மந்தவெளி நடராஜன், கோபி, ஜவகர்தீன், பரணி, குமார், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போட்டியில்,  சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் சைதை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பேச்சு போட்டியை துவக்கி வைத்து உரையாற்றினார்.இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்எல்ஏக்கள் தா.மோ.அன்பரசன், எஸ்.அரவிந்த் ரமேஷ் மற்றும் பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, என்.சந்திரன், பி.குணாளன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Tags : Bharathidasan Song, Recognition ,Contest, Anna's Birthday
× RELATED பாண்டியர் ஆட்சிகாலத்தை விளக்கும்...