ரத்ததான முகாம்

பெரம்பூர்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 25வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மண்ணடியில் ரத்ததானம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மத்திய சென்னை மாவட்ட தலைவர் மீரான் தலைமை வகித்தார். எம்எம்ஏ சேகர்பாபு தொடங்கி வைத்தார். முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். 200 பேர் ரத்ததானம் செய்தனர். இதில் தமுமுக நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : bloodbath,camp
× RELATED கோயம்பேட்டில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்