கஞ்சா விற்ற 2 பேர் கைது

பெரம்பூர்: காசிமேடு பவர்குப்பம், இந்திரா நகர், தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு, வ.உ.சி.நகர் உள்ளிட்ட பகுதியில் கஞ்சா விற்பனையாவதாக வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு புதுவண்னை, தண்டையார்பேட்டை பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ப்போது போலீசாரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் ஓட்டம் பிடித்தார். உடனே அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் (34) என்பதும், கஞ்சா வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர். ஆலந்தூர்:  ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக புகார் வந்தது. ஆதம்பாக்கம் போலீசார் அம்பேத்கர் நகரில் சோதணை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த மஞ்சு (33) என்பவர் கஞ்சா விற்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.  அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : 2 arrested, selling, cannabis
× RELATED வேதாரண்யம் அருகே திருமணம் செய்து...