பெண்ணிடம் நகை பறிப்பு

அம்பத்தூர்:  அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், கே.ஆர்.நகர், நாகம்மை தெருவில் வீட்டின் முன்பாக கோலம் போட்டுக்கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் செயினை பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர். அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், கே.ஆர்.நகர், நாகம்மை தெருவை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (42). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வைஷ்ணவி (36). இவர், நேற்று காலை 6 மணியளவில் தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவன் பைக்கில் இருந்து இறங்கி வந்து வைஷ்ணவி கழுத்தில் இருந்த 5 சவரன் சங்கிலியை பறித்தான். இதனால் அவர் அலறி சத்தம்போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அவர்கள் ஓடி வருவதற்குள், இருவரும் பைக்கில் செயினுடன் தப்பினர். கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: