எதிரி நாடுகளின் மீது ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவும் சூப்பர் ராக்கெட் லாஞ்சர்: வடகொரியா வெற்றிகர சோதனை

சியோல்: எதிரி நாடுகளின் மீது ஒரே நேரத்தில் பல  ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தக்கூடிய, ‘சூப்பர் ராக்கெட் லாஞ்சர்’ சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.  உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை  நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான்,  தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வடகொரிய  அதிபர் கிம்மும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சிங்கப்பூரில் சந்தித்து  வரலாற்று புகழ்மிக்க பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில், அணு  ஆயுதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக வடகொரியா அறிவித்தது.அதன் பின்னர், அமெரிக்கா -  வடகொரியா இடையிலான பேச்சுவார்த்தையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்கா-தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியை சமீபத்தில் நடந்தது.

Advertising
Advertising

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகொரியா கடந்த ஜூலை 25, 31, மற்றும் ஆகஸ்டு 2, 6, 10, 16 ஆகிய தேதிகளில் ஏவுகணை சோதனைகளை  நடத்தியது. இந்நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டதை தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.இது  தொடர்பாக தென் கொரியா ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `வடகொரியாவின் கிழக்கு கடலோரப் பகுதியிலிருந்து இரு ஏவுகணைகள் கடந்த  சனிக்கிழமை விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டன. குறுகிய தொலைவு வகையைச் சேர்ந்த அவை, 97 கி.மீ. உயரம் வரை சென்று, 380 கி.மீ. தொலைவில் ஜப்பான் கடலில்  விழுந்தன. இது, கடந்த  சில வாரங்களில் வட கொரியா மேற்கொள்ளும் 7வது ஏவுகணை பரிசோதனையாகும்,’ என்று  கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் நேரடி மேற்பார்வையில், ஒரே நேரத்தில் பல  ஏவுகணைகளை செலுத்தும் திறன் படைத்த மிகப்பெரிய ‘சூப்பர் ராக்கெட் லாஞ்சர்’ சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது  குறித்து வடகொரிய அதிபர் கிம் கூறுகையில், இந்த புதிய மேம்படுத்தப்பட்ட  ஆயுதம் மிகவும் வலிமையான ஆயுதம். எரிச்சலூட்டும் வகையில் பெருகி வரும்,  எதிரி நாடுகளின் ராணுவ அச்சுறுத்தல்கள், ஆதிக்க அழுத்தங்களை தயக்கமின்றி  தடுக்கும் வகையில், ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர வேண்டிய தேவை  வடகொரியாவுக்கு ஏற்பட்டுள்ளது,’’ எனக் கூறினார்.

Related Stories: