×

ரகானே, விஹாரி அபார ஆட்டம் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில், வலுவான முன்னிலை பெற்ற இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.நார்த்சவுண்டு, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன் குவித்து ஆல் அவுட்டானது (96.4 ஓவர்). கே.எல்.ராகுல் 44, அஜிங்க்யா ரகானே 81, ஜடேஜா 58 ரன் விளாசினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னுக்கு சுருண்டது (74.2 ஓவர்). சேஸ் 48, கேப்டன் ஹோல்டர் 39, ஹெட்மயர் 35 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 17 ஓவரில் 5 மெய்டன் உட்பட 43 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஷமி, ஜடேஜா தலா 2, பூம்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 75 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கோஹ்லி 51 ரன், ரகானே 53 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். கோஹ்லி 51 ரன்னிலேயே (113 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினார். அடுத்து ரகானேவுடன் ஹனுமா விஹாரி இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். உணவு இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்திருந்தது. ரகானே 90 ரன், விஹாரி 57 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளதால், இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Tags : Rahane, Vihari Apara,Aatam's chance , win, India
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்