துபாயில் சாலையெங்கும் மரங்கள் சோலைவனமாகும் பாலைவனங்கள்

துபாய்: பாலைவனத்தை சோலைவனமாக்குவதில் முன்னுரிமை அளிப்பதில் துபாய் நிர்வாகம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது..துபாயில் சாலைகள் சோலைகளாக மாற்றம் பெற்று வருகிறது இருபுறமும் அடர்ந்த மரங்கள் மற்றும் மலர்கள்  பூத்து குலுங்குகிறது. பல்வேறு இடங்களில் ஆண்டுதோறும் 37 லட்சத்திற்கும் அதிகமான மலர்செடிகள் நடப்படுகிறது. ஆண்டுக்கு மூன்று கட்டங்களாக இந்த வண்ண‌ மலர்செடிகள் நடப்படுகிறது செப்டம்பர் முதல் அக்டோபர்  ஜனவரி முதல் பிப்ரவரி வரை  மே முதல் ஜூன் வரை என மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு விதவிதமான மலர்கள் நடவு செய்யப்படுகிறது.இதற்காக உலகம் முழுவதுமிருந்து அழகு மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு சாலைகள் நடப்படுகிறது.

Advertising
Advertising

அதேபோன்று வேப்ப மரம் தொடங்கி அனைத்து வகையான மரங்களும் சாலைகள் தோறும் நட்டு பராமரிக்கப்படுகிறது. பசுமை நகரமாக  உருப்பெற்று வரும் துபாய் நகரத்தில் ஆண்டுதோறும் மழையின் அளவும் அதிகரித்து வருகிறது. நகரை பசுமையாக உருவாக்க துபாய் அரசு பல மில்லியன்களை செலவிடுகிறது. இங்கு மரங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. எளிதாக மரங்களை வெட்டி விட முடியாது. யாரேனும் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: