உபா சட்டத்தில் கைதான ஆனந்த் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்

பாட்னா: வீட்டில் ஆயுதம் வைத்திருந்ததால் ‘உபா’ சட்டத்தில் கைதான  சர்ச்சைக்குரிய பீகார் சுயேச்சை எம்எல்ஏ ஆனந்த் சிங், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.பீகார் மாநிலம், மொகாமா சட்டப்பேரவை தொகுதியில் 2 முறை எம்எல்ஏ.வாக இருந்தவர் ஆனந்த் சிங். ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்த இவர், முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது கட்சியில் இருந்து விலகி, இதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சமீபத்தில், இவருடைய மூதாதையர் வீட்டில்  போலீசார் நடத்திய சோதனையில், ஏகே-47, தோட்டாக்கள், 2  கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, இவர் மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் வழக்கு பதியப்பட்டது. இதனால் தலைமறைவான அவர், டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று, பீகார் போலீசார் அவரை பாட்னா அழைத்து வந்தனர். நேற்று அவர் பார்க் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

Tags : Anand Singh,appeals, court
× RELATED ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற சமூக...