×

டி.ராஜா வேதனை காஷ்மீரில் நிலைமை சுமூகமாக இல்லை

ஐதராபாத்: ‘‘காஷ்மீரில் நிலைமை சுமூகமாக இல்லை. மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலையில்தான் அங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்,’’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வேதனை தெரிவித்துள்ளார்.காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட 11 எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று முன்தினம் நகர் சென்றனர். ஆனால், விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்ட அவர்கள், அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்நிலையில், டி.ராஜா ஐதராபாத்தில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:காஷ்மீரில் நிலைமை சுமூகமாக இல்லை. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அங்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி இணைப்பு செயல்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால், நாங்கள் சோதித்து பார்த்த வரையில், தொலைபேசி எதுவும் செயல்படவில்லை. இன்டர்நெட் சேவை இல்லை. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்களை அனுப்ப பெற்றோர் தயாராக இல்லை.

அங்கு அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள். இன்னமும் ஊரடங்கு நீடிக்கிறது. எல்லாம் சரியாக இருந்தாலும், எதற்காக இந்த ஊரடங்கு தொடர்கிறது? சட்டப்பிரிவு 370ஐ மோடி அரசு நீக்கியது அரசியலமைப்புக்கு எதிரானது. ஜனநாயகத்திற்கு முரணானது. நமது ஜனநாயகத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. சுதந்திரத்திற்கு பிறகு நாட்டின் ஒரு பகுதியாக காஷ்மீரும் இணைந்து விட்டது. ஆனால், அதை சர்ச்சைக்குரிய பகுதியாக கூறும் பாஜ.வும், ஆர்எஸ்எஸ்.சும் ஏதோ மோடி பிரதமராக வந்த பிறகுதான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததாக மாற்றப் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஜின்னாவே ஏற்கவில்லை
மேலும் டி.ராஜா கூறுகையில், ‘‘பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கும், இந்திய முஸ்லிம்களுக்கும் இடையே கலாச்சார வேறுபாடுகள் உள்ளன. இந்திய முஸ்லிம்களையோ, காஷ்மீர் முஸ்லிம்களையோ பாகிஸ்தானியர்கள் ஏற்க மாட்டார்கள். பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா கூட, அவரது சித்தாத்தங்களுடன் ஒன்றிப் போகும் இஸ்லாமியர்களாக காஷ்மீரி முஸ்லிம்களை கருதவில்லை,’’ என்றார்.

Tags : D. Raja Vedanta,situation ,Kashmir, smooth
× RELATED கோகுல் ராஜ் கொலை விவகாரம் வழக்கை 3...