4 மாநிலங்களில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு செப். 23-ல் இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி :  சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கரில் தாண்டே வாடா, கேரளத்தில் பலா, திரிபுராவில் பதர்கட் மற்றும் உ.பி.யில் ஹமீர்ப்பூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து நான்கு மாநிலத்தின் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

வரும் 28-ம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 8 நாட்கள் நடைபெறும் வேட்புமனு தாக்கல் செப். 4-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் 7-ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள். மேலும் செப். 23-ம் தேதி தேர்தல் நடைபெறும், பின்னர் தேர்தலில் பதிவான ஓட்டுகள் செப்.,27-ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags : Sep. 4 , 4 Assembly constituencies , 4 states, By-Election
× RELATED திருவள்ளூர் அருகே நிகழ்ந்த சாலை...