வடபழனி பேருந்து பணிமனை விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : சென்னை வடபழனி பேருந்து பணிமனை விபத்தில் உயிரிழந்த சேகர், பாரதி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை வடபழனி அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில் கடந்த மாதம் 28-ம் தேதி நள்ளிரவு 12:40 மணி அளவில் ஊழியர்கள் பணிகளை முடித்து கொண்டு பணிமனையில் இருந்த ஓய்வறையில் அமர்ந்து இருந்துள்ளனர்.

அப்போது ஓய்வறையின் அருகே அமைந்திருக்கும் பேருந்து பழுதுபார்க்கும் இடத்திலிருந்து பேருந்து இயக்கப்பட்டபோது, எதிர்பாராவிதமாக பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதி நின்றுள்ளது, இதில் சுவர் இடிந்து விழுந்தில் பணிமனை ஓய்வறையில் இருந்த ஓய்வெடுத்துகொண்டிருந்த ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். அதில், இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த ஊழியர்கள் சேகர், பாரதி குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதி, குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் இதே விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: