42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் பி.வி.சிந்து

சுவிட்சர்லாந்து :  உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெறும் 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் சீனாவின் சென் யூ- வுடன் சிந்து மோதினார், 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து , சென் யூ-வை  21க்கு 7 , 21 க்கு 14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

Advertising
Advertising

பின்னர் இன்று நடைபெற இறுதி போட்டியில் பி.வி.சிந்துவும் ஜப்பானின் நோசோமி ஒகுஹரா மோதினர். இந்த ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹராவை 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றுள்ளார். 42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து.

பி.வி.சிந்து பேட்டி :

கடந்த 2 போட்டிகளிலும் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட தனக்கு இப்போட்டியின் வெற்றி மிகவும் முக்கியமானது என்று பி.வி.சிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் இந்த வெற்றியை தனது தாயின் பிறந்தநாளுக்கு அர்பணிப்பதாக சிந்து பெருமிதம் கொண்டார்.

Related Stories: