காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து தலைமை செயலகத்தில் பறக்க விடப்பட்ட அம்மாநில கொடி அகற்றம்..!

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான தனிக்கொடி தலைமைச் செயலாகக் கட்டிடத்தில் இருந்து அகற்றப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள மாநில தலைமைச் செயலகக் கட்டிடத்தில் தேசியக் கொடியுடன் காஷ்மீர் கொடியும் பறந்து கொண்டு இருந்தது. தற்போது தேசிய கொடி மட்டும் பறக்க விடப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தின் படி தேசியக்கொடியுடன், அம்மாநிலம் தனிக்கொடியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் 370ஐ மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்ததுடன், அதை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது.

Advertising
Advertising

அங்கு ஓரளவு இயல்பு நிலை திரும்பிவந்ததால், மத்திய அரசு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக அறிவித்தது. நிலைமை ஓரளவு சீரடைந்ததை தொடர்ந்து  தொலைபேசி சேவை சில இடங்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து மாநிலக் கொடியை அகற்றி உள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள மற்ற அரசு அலுவலகங்களிலும், காஷ்மீர் மாநில கொடி அகற்றப்பட்டு, தேசிய கொடி பறக்கவிடப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மாநிலத்தில் உள்ள பல அரசு அலுவலகங்களில் மாநில கொடி இன்னும் பறந்து வருகிறது. அவை விரைவில் அகற்றப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: