மதுரையை அடுத்த மேலூரில் கணேஷ் திரையரங்கில் மின்கசிவு காரணமாக தீடீரென தீவிபத்து

மதுரை: மதுரையை அடுத்த மேலூரில் கணேஷ் திரையரங்கில் தீடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த கணேஷ் காம்ப்ளெக்ஸில் உள்ள திரையரங்குகளில் இன்று மதிய காட்சி ஓடிக்கொண்டிருந்த நிலையில்  மானை 4மணி அளவில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஓர் அறையில் மின்கசிவு காரணமாக தீடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.  உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் பின்னர் , தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அனைக்க முயற்சி செய்யப்பட்டன.

Advertising
Advertising

ஆனால் புகைமண்டலம் அதிகமாக காணப்பட்டதால் உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, அரைமணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அந்த அறை முழுவதும் எரிந்து தீயில் கருகிய நிலையில் காணப்பட்டது. தீவிபத்து உடனடியாக கண்டறிய பட்டதால் திரையரங்கில் இருந்த ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆகையால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது தீ முழுவதுமாக அனைக்கப்பட்டுள்ளதாகவும் , இன்றைய மதிய காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: