மூணாறு அருகே காட்டு யானையால் விவசாய நிலங்கள் சேதம்: விவசாயிகள் கவலை

மூணாறு: மூணாறு அருகில் அமைந்துள்ள சின்னக்கானல் சிங்குகண்டம் பகுதியில் காட்டு யானை இறங்கி விவசாய நிலங்களை முற்றிலும் சேதப்படுத்தியது.. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூணாறு அருகில் அமைந்துள்ளது சின்னக்கானல் பகுதி இங்கு சிங்குகண்டம் என்ற இடத்தில் ஏரளமான விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் காப்பி, ஏலக்காய், மிளகு போன்ற விவசாய பொருட்கள் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக காட்டில் இருந்து இறங்கி விவசாய நிலங்களுக்கு யானைகள் கூட்டம் படையெடுத்த வண்ணம் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு காட்டு யானை கூட்டமாக இப்பகுதியில் இறங்கியது  . பல ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்கள் வைத்து விவசாயம் செய்து வரும் முருகேசன், ஷாஜி, ரெஜி இவர்களில் விவசாய நிலங்களில் புகுந்த யானை விவசாய நிலங்களை முற்றிலும் சேதப்படுத்தியது. இங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை, பலா, ஏலக்காய் போன்ற விவசாய பொருட்களை சேதப்படுத்திய யானை பல மணி நேரம் அப்பகுதியில் நின்றது. இதன் காரணமாக யாரும் வெளியில் வரமுடியாது சூழல் உருவானது. சிங்குகண்டம் பகுதிகளில் யானைகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த சமயமும் யானைகள் இறங்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பயத்துடன் காணப்படுகின்றனர். எனவே யானைகளை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: