கீழ்நாடுகாணியில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் பந்தலூர் பகுதிகளில் கடந்த 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை பெய்த கனமழையால் கூடலூரில் இருந்து கீழ் நாடுகாணி வழியாக கேரளா செல்லும் நெடுஞ்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் தேன்பாறை என்ற இடத்தில் 500 மீ., உயரத்தில் இருந்து பெரிய அளவிலான பாறைகள் சரிந்து விழுந்ததில் அப்பகுதி சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 17 நாட்களாக இச்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இந்நிலையில் கீழ் நாடுகாணி சாலையில் கேரள எல்லையில் இருந்து தேன் பாறை பகுதி வரை சாலையில் விழுந்து கிடந்த மண், பாறைகள் மற்றும் மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் கடந்த இரு தினங்களாக அகற்றும் பணி நடந்து வந்தது.

இப்பணிகள் முடிவடைந்து உள்ளதால் தற்போது இருபுறமும் பாறைகள் சரிந்து உள்ள தேன்பாறை பகுதி வரை ஜீப்புகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இருபுறமும் இருந்து வரும் பயணிகள் மண்சரிவு ஏற்பட்ட ஆபத்தான பகுதியில் பாறைகளின் மீது ஏறி கடந்து மீண்டும் ஜீப் மற்றும் ஆட்டோக்களில் ஏறி பயணிக்க துவங்கி உள்ளனர். மேலும் சாலையில் குவிந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பாறைகளை உடைத்து அகற்றும் நடவடிக்கையையும் கேரள நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருவதால் விரைவில் இந்த சாலையில் போக்குவரத்து மீண்டும் துவங்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

பந்தலூர்: பந்தலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால்  பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, குடியிருப்புகள் சேதம் மற்றும் நெடுஞ்சாலையில் பாதிப்புகள் ஏற்பட்டதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பந்தலூரில் இருந்து கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, கேரளா மாநிலம் செல்லும் நெடுஞ்சாலை எலியாஸ் கடை அருகே கொளப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் வெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு கடந்த 17 நாட்களாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் ஓரளவிற்கு முடிவடைந்த நிலையில் நேற்று முதல் போக்குவரத்து துவங்கியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Underground, road reconstruction work, initiation
× RELATED பாதாள சாக்கடை பணி முடிந்தும்...