நீலகிரியில் மழை ஓய்ந்தது; சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு... வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி துவங்கிய மழை சுமார் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு, சாலை துண்டிப்பு போன்றவை ஏற்பட்டது. குறிப்பாக, கேரள மாநிலத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் மழை பாதிப்புகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால், கடந்த 15 நாட்களாக ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் சுற்றலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கிருஷ்ணர் ெஜயந்தி, வார விடுமுறை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. எனினும், தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து மாநில எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், ேகரளா மற்றும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு பின் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நேற்று வந்திருந்தனர். ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Nilgiris, the rain is down, the tourist
× RELATED தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு...