கொடுமுடியில் மாசடைந்த குடிநீர் விநியோகம்: மக்கள் பாதிப்பு

கொடுமுடி: கொடுமுடியில் மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்வதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொடுமுடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், 10க்கும் மேற்பட்ட சிறு உணவகங்களும் உள்ளன. இப்பகுதியில் கொடுமுடி பேரூராட்சியின் குடிநீர் இணைப்புகள் மூலம் காவிரி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை குடிநீருக்காகவும் மற்ற உபயோகத்துக்காகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக விநியோகிக்கப்படும் காவிரி நீரானது கலங்கலாக, மாசடைந்து கருமை நிறத்தில் வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் அந்த நீரை குடிநீர் உபயோகத்துக்கு பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொடுமுடி பேரூராட்சி நிர்வாகம் தூய்மையான நீரை தங்களுக்கு விநியோகம் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Contamination, contaminated drinking water, distribution
× RELATED அரவக்குறிச்சி பெருசு நகரில் குழாய்...