புதியது, புதுப்பித்தது எல்லாம் பெயர்ந்தது: குமரியில் சாரல் மழைக்கே தாக்கு பிடிக்காத சாலைகள்... ரப்பர் கலந்த சாலைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாகர்கோவில்: குமரியில் ஒரு நாள் சாரல் மழைக்கே சாலைகள் தாக்குபிடிக்காமல் பள்ளங்களுடன் காட்சி அளிக்கின்றன. குமரியில் கடந்த 5 ஆண்டுகள் முன்பு குக்கிராம சாலைகள் முதல் நாகர்கோவில் மாநகர சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் வரை குண்டும் குழியுமாக காணப்பட்டன. இந்நிலையில் பா.ஜனதா ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பொன்.ராதா கிருஷ்ணன் மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் ஆன பின்னர், தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, மாநில நெடுஞ்சாலைகள், ஊராட்சி சாலைகளையும் சீரமைக்க மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்று தந்தார். ஆனாலும், இந்த நிதி மாநில அரசிற்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் மூலமே பணிகள் நடைபெறும் என்பதால், பெரும்பாலான சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றன. மாநில நெடுஞ்சாலை மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலையிலும் தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்று சாலை போடப்பட்ட மறுநாளே பெயர்ந்ததால், போராட்டங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாதிரிகள் சேகரித்து சென்றனர். இதற்கிடையே அப்டா சந்தை, தேரேகால்புதூர், தோவாளை ஆர்டிஓ அலுவலகம் அருகே உள்ளபாலம்போன்ற பகுதிகளில் கடந்த இரு ஆண்டுகள் முன்பே ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டது. பல மாதங்கள் இழுபறியில் இச்சாலை பழுதுபார்க்கப்பட்டாலும், தற்போது, இந்த சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலை போடும்போது, குறைவான தார்கலவையில் மண்ெணண்ணெய் ஊற்றி சாலையின் பெயின்ட் அடிப்பது போல் அடிக்கின்றனர். இதனால் சாலை போடப்பட்ட மறுநாளே பழுதாகி விடுகிறது. புதிய சாலையும் சரி புதுப்பித்த சாலைகளும் சரி ஒரு சில நாட்களிலேயே பழுதாகி விடுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில், தோட்டியோடு,  அப்டா மார்க்கெட் பகுதிகளில் சாலைகள் முற்றிலும் பயணிக்க முடியாத அளவு மோசமாக காணப்படுகிறது.

இதுபோல் நாகர்கோவில் நகரிலும், மாநகராட்சி சாலைகள் குண்டும் குழியுமாக மீண்டும் மக்களை மிரட்டி வருகிறது. இதனால் சாலைகளில் உயிர் பயத்துடன்தான் இருசக்கர வாகன ஒட்டிகள் செல்ல வேண்டியது உள்ளது. அதிகளவு மழை பொழியும் மாநிலமான கேரளாவில் சாலைகள் தரத்துடன் உள்ளன. இதற்கு அங்கு தார்கலவையுடன், ரப்பர் துகள்கள் கலப்பதே காரணம். இருபருவ மழை பொழியும் குமரியில் இந்த ரப்பர் கலவை பயன்படுத்தப்படுவதில்லை. எனவே கேரளா போன்று இங்கும் ரப்பர் கலவை கலந்த தார் சாலைகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். இது பற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  வட்டாரத்தில் கேட்டபோது, கான்கிரீட் சாலைகள் நீங்கலாக 4 வகையான தார் கலவை  சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதில் குறைந்த அளவு பிளாஸ்டிக் கழிவுகளை  கலப்பது, ரப்பர் மற்றும் க்ரம்ப் என்ற ரசாயனம் கலந்த கலவை மூலம் சாலை  அமைக்கலாம். இதற்கு மண் ஆய்வு உள்பட பல்வேறு சோதனைகள் நடத்த வேண்டும்.  ரப்பர் கலவை கலந்து சாலை அமைக்க செலவு மிகவும் அதிகம். தற்போது இந்த  க்ரம்ப் துகள்கள் கிடைப்பதும் இல்லை என்றனர்.  

மறுநாளே காணாமல் போன சாலைகள்

தாழக்குடி  அருகே சந்தைவிளையை அடுத்த கனகமூலம் புதுக்குடியிருப்பில் இருந்து  நெடுமங்காடு சாலை வரை கடந்தாண்டு சாலை அமைக்கப்பட்டது. ஆனால், மிகவும்  மோசமான தரத்துடன் போடப்பட்ட இச்சாலையில் மறுநாளே குண்டும் குழியும் ஏற்பட்டது.அடுத்து சில நாட்களில் மழை பெய்தபோது இச்சாலை முழுவதும் குண்டு துளைத்தது  போல் பெரிய பொத்தல்கள் ஏற்பட்டு, இச்சாலை முற்றிலும் பழுதாகி விட்டது.  இதுபற்றி திருநெல்வேலியில் இருந்து வந்த அதிகாரிகள், சாலையில் இறங்காமலே ஆய்வும்  செய்து சென்றனர். ஆனால், சாலையை தரமற்ற முறையில்போட்டவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சாலையும் புதியதாக போடப்படவில்ைல.

மறுநாளே காணாமல் போன சாலைகள்

தாழக்குடி  அருகே சந்தைவிளையை அடுத்த கனகமூலம் புதுக்குடியிருப்பில் இருந்து  நெடுமங்காடு சாலை வரை கடந்தாண்டு சாலை அமைக்கப்பட்டது. ஆனால், மிகவும்  மோசமான தரத்துடன் போடப்பட்ட இச்சாலையில் மறுநாளே குண்டும் குழியும் ஏற்பட்டது.அடுத்து சில நாட்களில் மழை பெய்தபோது இச்சாலை முழுவதும் குண்டு துளைத்தது  போல் பெரிய பொத்தல்கள் ஏற்பட்டு, இச்சாலை முற்றிலும் பழுதாகி விட்டது.  இதுபற்றி திருநெல்வேலியில் இருந்து வந்த அதிகாரிகள், சாலையில் இறங்காமலே ஆய்வும்  செய்து சென்றனர். ஆனால், சாலையை தரமற்ற முறையில்போட்டவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சாலையும் புதியதாக போடப்படவில்ைல.

ரூ3 கோடியில் சாலைகள் சீரமைப்பு

இதுபற்றி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரிடம் கேட்டபோது அவர் கூறியது: தற்போது, மோசமான சாலைகள் அதன் ஆயுட்காலம் முடிவடைந்தவையே. இவற்ைற சீரமைக்க ₹3 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மலையோர பகுதிகளில் உள்ள சாலைகள் தான் தற்போது பழுதாகி உள்ளன. எனவே இந்த நிதியில் அருமனை முதல் ஆரல்வாய்மொழி வரை உள்ள சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக சாலைகள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்குள்,  சீரமைக்கப்பட வேண்டிய சாலைகளை கண்டறிந்து, அவற்றை  சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முட்டுக்கட்டை

 3 ஆண்டுகள் என்பதற்கு பதில் 5 ஆண்டுகள் ஆயுட்காலம் ெகாண்ட சாலைகளை அமைப்பதன் மூலம், தரமான சாலைகளை அமைக்க முடியும். ஆனால் கமிஷன் காரணமாக இதுபோன்ற தரமான சாலைகள் அமைக்க அரசியல்வாதிகள் முட்டுக்கட்ைட போடுவதகவும் புகார் எழுந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் கிண்டல்

வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் மோசமான சாலைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதை கலாய்த்தும் வேதனை தெரிவித்தும்  மீம்ஸ் வலம் வருகின்றன. அதில் ஒன்று, பெருஞ்சாணி சாலை காலி, பொன்மனை, சுருளகோடு, சித்திரங்கோடு, மங்கலம் புரவூர், ஈஞ்சக்கோடு, தடிக்காரன்கோணம் சாலை காலி, பொதுமக்கள் கதறல், மாவட்ட நிர்வாகம் ஜாலி என்ற மீம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ரூ42 கோடியில் தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைப்பு

தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட ெபாறியாளர் ஜெகன் கூறியது: 2015ல் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. தற்போது சாலைகள் குறிப்பிட்ட காலத்திற்கே தாக்குபிடிக்கும் என்ற வடிவமைப்பில்தான் போடப்படுகின்றன. இதன்படி 3 ஆண்டுகள் மட்டுமே சாலைகளின் ஆயுட்காலம். எனவே அதற்கேற்ற தரத்தில்தான் சாலை அமைக்கின்றனர். தற்போது ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது. எனவே பார்வதிபுரம் காவல்கிணறு சாலையை சீரமைக்க 18 கோடியும், களியக்காவிளை கன்னியாகுமரி சாலையில் நன்றாக உள்ள பகுதிகள் நீங்கலாக பழுதான பகுதிகளை   சீரமைக்க ரூ10 மற்றும் ரூ14 கோடி என இரு கட்டமாக நிதிஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக வருகிற 27ம் தேதி களியக்காவிளை - கன்னியாகுமரி சாலைக்கான ஒப்பந்தபுள்ளியும், காவல்கிணறு சாலைக்கு  செப்டம்பர் 4ம் தேதியும் ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளது. எனவே விரைவில் இச்சாலைகள் சீரமைக்கப்பட்டு விடும். பழுதுபார்ப்பு பணிகள் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். ஆனால், சாலையின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டதால், மழை பெய்த உடன் பழுதுபார்த்த பகுதிகள் மீண்டும் பள்ளமாகி விடுகின்றன. தற்போது பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநகர சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்

கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது, பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் கான்டிராக்டரகள் இடையே உள்ள மோதல் காரணமாக சாலைகளை சீரமைக்க நீதிமன்றம் ெசல்வதும் சாலைகளை உடனடியாக சீரமைக்க முடியாமைக்கு ஒரு காரணம்  என்றாலும் அதிகாரிகள் முறையாக ஒப்பந்தம் இட்டு பணிகள் செய்தால் நீதிமன்றம் ஏன் பணிகளை தடுக்க போகிறது. தற்போது நாகர்கோவிலில் புத்தன்அணை குடிநீர் திட்டத்திற்காக புதியதாக போடப்பட்ட சாலைகளை கண்டபடி தோண்டுகின்றனர். ஆனால் சாலையை முறையாக மூடுவதற்கு, 11 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்து, புத்தன் அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து சோதனையிட்ட பின்னர்தான் மூட முடியும். எப்படியும் இதற்கு குறைந்தது இரு ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும் இதில் அலட்சியம் காட்டுகின்றனர்.  அதுவரை மக்கள் கடும் அவதி அடைய வேண்டிய நிலை உள்ளது. உயிர் காக்க தலைக் கவசம் கட்டாயம் என்கிற அரசு அதே உயிரை காக்க தரமான சாலைகள் வேண்டும் என்பதனை மறப்பது ஏனோ? எனவே நாகர்கோவில் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் சாலைகளை சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால், நுகர்வோர் அமைப்பு போராட்டம் நடத்தும் என்றார்.

Related Stories: