68-வது பிறந்த நாளை கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: 68-வது பிறந்த நாளை கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி, நேற்று கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். விஜயகாந்தின் உடல்நலம் முழுவதுமாக குணமடையாததால் வெளி நிகழ்வுகளில் அவர் அதிகமாக பங்கேற்பது இல்லை. கட்சிப் பணிகளை அவரது மனைவியே பார்த்து வருகிறார். இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அறிக்கை வாயிலாகவும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வவம் தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஆகியோர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விஜயகாந்தை இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த்தின் 68-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பூங்கொத்து கொடுத்தும் மாலை அணிவித்தும் தொடர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 


Tags : Congratulations to Timutheka, Vijayakanth, political party leaders
× RELATED 100 நாள் திட்டத்தில் ரூ.12 கோடி மோசடி?:...