காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்...நாட்டு மக்களுக்கு மோடி உரை

டெல்லி: காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமை இந்திய வானொலி வழியே நாட்டு மக்களிடையே மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார்.

இந்தாண்டு இந்தியா ஒரு பெரிய திருவிழாவிற்காக தயாராகி வருகிறது. அக்டோபர் 2-ம் தேதி வரும் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தினை பற்றி உலகம் முழுவதும் மக்கள் பேசி வருகின்றனர். மேலும் திறந்தவெளி கழிப்பறை பயன்பாடு இல்லாத இந்தியாவையும் உருவாக்கி காந்தியடிகளுக்கு அர்ப்பணிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவரது 150-வது ஆண்டு தின கொண்டாட்டத்தில், தூய்மையான இந்தியாவை அவருக்கு அர்ப்பணிப்பதுடன், பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பெரிய இயக்கத்தினையும் நாம் தொடங்க வேண்டும் என்றார். பின்னர் ஆக.29-ல் தேசிய விளையாட்டு தினத்தன்று ‘ஃபிட் இந்தியா திட்டம்’ அறிமுகம் செய்யப்படும் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: