பரமக்குடியில் செப்.11ல் இமானுவேல் சேகரன் குருபூஜை: மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் தீவிரம்

பரமக்குடி: பரமக்குடியில் செப்.11ம் தேதி நடைபெறும் இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஆண்டுதோறும் செப்.11ல் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். வரும் செப்.11ம் தேதி நடைபெறவுள்ள குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது. மாவட்டம் மற்றும் வெளியூரிலிருந்து வரும் வாகனங்களுக்கு எப்போதும் உள்ள நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

வழித்தடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளியூரிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தும் இடங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பரமக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரியிலும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பரமக்குடி நகராட்சி சார்பாக நினைவிடத்திற்கு முன் செல்லும் ரீச் கால்வாயில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டு கழிவுநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நினைவிடத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பரமக்குடி டிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Paramakudi, Emanuel Sheeran Kurupoojai
× RELATED தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு...