திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: திமுக இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பு 35 வரை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், 30 லட்சம் பேர்களை இளைஞரணியில் சேர்ப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.. தேசிய கல்விக்கொள்கை வரையறையை திரும்பப்பெற வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை திமுக இளைஞரணியின் மண்டல மாநாடு நடத்தப்பட்டு பின்னர், மாநில மாநாடு நடத்தப்படும். இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளன. தமிழகத்தில் தபால் மற்றும்  ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: