தா.பழூர் அருகே விவசாய நிலத்தில் புகுந்த முதலை: பொது மக்கள் பீதி

தா.பழூர்: தா.பழூர் அருகே விவசாய நிலத்தில் முதலை புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள். விவசாயி. இவர் தன்னுடைய நிலத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறார். நேற்று காலையில் அருள் வெண்டைக்காய் பறிப்பதற்காக வயலுக்கு சென்றார். அங்கு பறவைகள் கூட்டம், கூட்டமாக சுற்றிக்கொண்டு இருந்ததை பார்த்து என்னமோ, ஏதோ என வேகமாக சென்று பார்த்தார். அப்போது 5 அடி நீளமுள்ள முதலை கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம், பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தார். பின்னர் ஒரு aகயிற்றால் முதலையை கட்டி வைத்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரி, பொதுமக்கள் உதவியுடன் முதலையை வாகனத்தில் ஏற்றி சென்று கொள்ளிடம் ஆற்றில் விட்டார்.

இதுபோல் தொடர்ந்து கொள்ளிட கரையில் உள்ள ஊருக்குள்அடிக்கடி முதலை வந்து கொண்டிருக்கின்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து அச்சத்தில் உள்ளனர். அடிக்கடி முதலைகள் ஊருக்குள் நுழைந்து வருவது தற்பொழுது அதிகமாகி உள்ளது. எனவே அணைக்கரையில் பயனற்றுக்கிடக்கும் முதலைப்பண்ணையை திறந்து மீண்டும் முதலையை பாதுகாக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: