தீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு

கோவை: கோவையில் தீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோவை காருண்யா நகர் காவல் நிலையத்தில் வைத்து 3 இளைஞர்களை விசாரித்து வந்த நிலையில் போலீசார் தற்போது அவர்களை விடுத்துள்ளனர். லஸ்கர் அமைப்புடன் தொடர்புடையதாக கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் உள்ளிட்ட 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அப்துல் காதருடன் தொலைபேசியில் பேசியதாக சந்தேகம் ஏற்பட்டதால் கோவையில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  மேலும் அவர்களிடம் தேவைப்படும்போது போலீசில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் 3 இளைஞர்களை போலீசார் விடுவித்தனர்.

கோவையில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து, கோவையில் கடந்த 3 நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையை சேர்ந்த சித்திக், கோவை உக்கடம் பொன்விழா நகரை சேர்ந்த ஜாகீர் ஆகிய 2 பேரை கோவையில்  சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்களுக்கு தடை செய்யப்பட்ட லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த அமைப்பு நிர்வாகிகளுடன் ஏற்கனவே, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கு தொடர்பு உள்ளது. அவருடன், மேற்கண்ட 2 பேரும் செல்போன் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரையும், கோவையில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் தங்கவைத்து, கோவை சரக டிஐஜி கார்த்திகேயன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது விசாரணையில் அப்துல் காதருடன் தொலைபேசியில் பேசியதாக சந்தேகம் ஏற்பட்டதால் கோவையில் நேற்று 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.  தற்போது அந்த 3 இளைஞர்களையும் போலீசார் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: