டிஜிட்டல் வர்த்தகம் ரூ.3 லட்சம் கோடி?

மும்பை: டிஜிட்டல் மயமாவதில் இந்தியா அதிவேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் சென்றால், இந்தியாவில் டிஜிட்டல் மய தொழில்நுட்பங்கள் அதிக அளவில் பரவும்.   அடுத்த ஐந்தாண்டில் உலக அளவில் இந்தியாவில் தான் அதிகமாக டிஜிட்டல் பயன்பாடு இருக்கும். இந்த வகையில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.  ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் இல்லை: நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களில் உள்ளவர்களிடமும் இப்போது ஸ்மார்ட் போன் புழங்க துவங்கி விட்டது. அப்புறம் என்ன...? வைபை வசதி வேண்டும். இப்படி போய், இப்போது வீடியோ எடுப்பது முதல் டிவி, வீடியோ பார்ப்பது வரை எல்லாமே கையடக்க ஸ்மார்ட் போனில் வசதிகள் வந்து விட்டன.
மொத்தத்தில் டிவி உட்பட மீடியா, சினிமா உட்பட பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாம் இனி வரும் காலத்தில் இன்னும்  அதிகரிக்கும். தியேட்டர்களில் கூட்டம் இருக்குமோ என்ற சந்தேகத்தை இப்போதே வரவழைக்க துவங்கி விட்டது. அந்த அளவுக்கு எல்லாமே, ஸ்மார்ட் போனில் வந்து விட்டது.

அடுத்த ஐந்தாண்டில் எல்லாமே  ஆன்லைன் மூலம் நிறைவேற்றிக்கொள்வோர் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி விடும் என்று கணக்கிடப்படுகிறது. அந்த அளவுக்கு நிதி  பரிவர்த்தனை, வீடியோ, டிவி, சினிமா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை டிஜிட்டலில் பெறுவது அதிகரிக்கும். இன்டர்நெட் என்பது ஆங்கிலம் என்பது போய், தாய்மொழியில் அதிகரிக்கும்.  அப்படி அதிகரிக்கும் போது, டிஜிட்டல் வர்த்தகமும் பெருகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில், அடுத்த ஐந்தாண்டில் டிஜிட்டல் வர்த்தகம், டிஜிட்டல் சாதனங்கள், மீடியா தொழில்நுட்பங்கள் எல்லாம் அடங்கிய வர்த்தகங்கள் 3 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது.


Tags : Digital,business, worth, Rs 3 lakh crore
× RELATED சிங்கப்பூரில் இருந்து விமானத்தில்...