2 ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி வடகொரியா சோதனை: தென்கொரியா குற்றச்சாட்டு

சியோல்: வடகொரியா 2 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.  வடகொரியா அடிக்கடி அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வந்ததால் அமெரிக்கா மற்றும் ஐநா சபை, அதன் மீது பொருளாதாரத் தடை விதித்தன. இதைத் தொடர்ந்து வடகொரியாவும், அமெரிக்காவும் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தின. கடந்த பிப்ரவரி மாதம் ஹனோய் நகரில் 2வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தது.  

இதையடுத்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்த தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை 25, ஜூலை 31, ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 10 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய நாட்களில் வடகொரியா ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டது. இந்நிலையில் நேற்று வடகொரியா 7வது ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த சோதனையில் குறுகிய தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் 2 ஏவுகணைகள்சோதனை செய்யப்பட்டுள்ளன.

Related Stories: