யுஎஸ் ஓபன் டென்னிஸ் பெடரருடன் மோதுகிறார் இந்தியாவின் சுமித் நாகல்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் சுமித் நாகல், முதல் சுற்றிலேயே நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரை (சுவிஸ்) சந்திக்கிறார். யுஎஸ் ஓபன் தகுதிச் சுற்றின் பைனலில் பிரேசிலின் ஜோவோ மெனஸெஸ் உடன் மோதிய நாகல் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரதான சுற்றில் விளையாடத் தகுதி பெற்ற 5வது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக சோம்தேவ், யுகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி, பிரஜ்னேஷ் குணேஷ்வரன் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர். யுஎஸ் ஓபன் முதல் சுற்றில், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுக்கு சொந்தக்காரரான சாதனை வீரர் ரோஜர் பெடரரின் சவாலை நாகல் எதிர்கொள்கிறார்.


Tags : India's Sumit Nagal,clashes , US ,Open Tennis Federer
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ் பெடரருக்கு எதிராக...