வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட்: இந்தியா முன்னிலை

ஆன்டிகுவா: இந்திய அணியுடனான முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.நார்த்சவுண்டு, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்திருந்த இந்தியா, 2ம் நாளில் 297 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (96.4 ஓவர்).கே.எல்.ராகுல் 44, அஜிங்க்யா ரகானே 81, விஹாரி 32, பன்ட் 24, ஜடேஜா 58, இஷாந்த் 19 ரன் எடுத்தனர்.இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்திருந்தது. சேஸ் 48, ஹெட்மயர் 35, ஹோப் 24, கேம்ப்பெல் 23, டேரன் பிராவோ 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். கேப்டன் ஹோல்டர் 10 ரன், கம்மின்ஸ் (0) இருவரும் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தது.

ஹோல்டர் 39 ரன் (65 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ஷமி வேகத்தில் பன்ட் வசம் பிடிபட்டார். 45 பந்துகளை சந்தித்த கம்மின்ஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஜடேஜா சுழலில் கிளீன் போல்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்னில் ஆல் அவுட்டானது (74.2 ஓவர்). கேப்ரியல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 17 ஓவரில் 5 மெய்டன் உட்பட 43 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஷமி, ஜடேஜா தலா 2, பூம்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, 75 ரன் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. இதில் பெரிய ஸ்கோர் அடித்து கடினமான இலக்கை நிர்ணயித்தால், இந்திய அணி எளிதாக வெற்றியை வசப்படுத்த முடியும் என்ற சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. இது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் விதிமுறைகளின் கீழ் இந்தியாவுக்கு முழுமையாக 60 புள்ளிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் வர்த்தகம் ரூ.3 லட்சம் கோடி?

மும்பை: டிஜிட்டல் மயமாவதில் இந்தியா அதிவேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் சென்றால், இந்தியாவில் டிஜிட்டல் மய தொழில்நுட்பங்கள் அதிக அளவில் பரவும்.   அடுத்த ஐந்தாண்டில் உலக அளவில் இந்தியாவில் தான் அதிகமாக டிஜிட்டல் பயன்பாடு இருக்கும். இந்த வகையில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.  ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் இல்லை: நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களில் உள்ளவர்களிடமும் இப்போது ஸ்மார்ட் போன் புழங்க துவங்கி விட்டது. அப்புறம் என்ன...? வைபை வதி வேண்டும். இப்படி போய், இப்போது வீடியோ எடுப்பது முதல் டிவி, வீடியோ பார்ப்பது வரை எல்லாமே கையடக்க ஸ்மார்ட் போனில் வசதிகள் வந்து விட்டன.

  மொத்தத்தில் டிவி உட்பட மீடியா, சினிமா உட்பட பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாம் இனி வரும் காலத்தில் இன்னும்  அதிகரிக்கும். தியேட்டர்களில் கூட்டம் இருக்குமோ என்ற சந்தேகத்தை இப்போதே வரவழைக்க துவங்கி விட்டது. அந்த அளவுக்கு எல்லாமே, ஸ்மார்ட் போனில் வந்து விட்டது.

அடுத்த ஐந்தாண்டில் எல்லாமே  ஆன்லைன் மூலம் நிறைவேற்றிக்கொள்வோர் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி விடும் என்று கணக்கிடப்படுகிறது. அந்த அளவுக்கு நிதி  பரிவர்த்தனை, வீடியோ, டிவி, சினிமா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை டிஜிட்டலில் பெறுவது அதிகரிக்கும். இன்டர்நெட் என்பது ஆங்கிலம் என்பது போய், தாய்மொழியில் அதிகரிக்கும்.  அப்படி அதிகரிக்கும் போது, டிஜிட்டல் வர்த்தகமும் பெருகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த வகையில், அடுத்த ஐந்தாண்டில் டிஜிட்டல் வர்த்தகம், டிஜிட்டல் சாதனங்கள், மீடியா தொழில்நுட்பங்கள் எல்லாம் அடங்கிய வர்த்தகங்கள் 3 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது.

5 விக்கெட் வீழ்த்தினார் இஷாந்த்

*  இந்திய வேகம் பூம்ரா, டெஸ்ட் போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹிர்வானி, ஹர்பஜனுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் (தலா 11 போட்டிகள்). ஆர் அஷ்வின் (9 போட்டி), அனில் கும்ப்ளே (10 போட்டி) முதல் 2 இடங்களில் உள்ளனர்.

* மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய வீரர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் பிசிசிஐ துணை தலைவர் பதவிகளை ஜெட்லி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: