டாம் லாதம் அபார சதம் நியூசிலாந்து 196/4

கொழும்பு: இலங்கை அணியுடனான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்துள்ளது.பி.சரவணமுத்து மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் 2 நாள் ஆட்டமும் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. டாசில் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி, 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் என்ற ஸ்கோருடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணி 90.2 ஓவரில் 244 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டிசில்வா 109, கேப்டன் கருணரத்னே 65, குசால் மெண்டிஸ் 32 ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் சவுத்தீ 4, போல்ட் 3, கிராண்ட்ஹோம், சாமர்வில்லி, அஜாஸ் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்துள்ளது (62 ஓவர்). ராவல் (0), வில்லியம்சன் 20, டெய்லர் 23, நிகோல்ஸ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். லாதம் 111 ரன், வாட்லிங் 25 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, நியூசி. 48 ரன் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.Tags : Tom Latham,Abbas, New Zealand, 196/4
× RELATED நியூசிலாந்து டூர்: இந்திய அணி இன்று தேர்வு